Cornea (after death)

Cornea (after death)

பார்வைக்கொடை (கண் தானம் / கருவிழிப்படலகொடை) :

  • உயிருடன் உள்ளவர் கண் தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்யலாம்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்கள் எடுக்கப்படும்.
    • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
    • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எடுக்கப்பட்ட கண்களின் கருவிழிப்படலம் (கார்னியா) அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
  • பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு.
  • ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்களை எடுக்க வேண்டும்
  • கண்ணாடி அணிந்தவர்கள், ஏற்கனவே கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூட தானம் செய்யலாம்

Leave a Reply